சுடச்சுட

  

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் செயல்படும் 8 கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் டி.பி. ராஜேஷ் தலைமையில் மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கோமாரி நோயை பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில்,  மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டணம், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சிங்காரப்பேட்டை, குந்தராப்பள்ளி, பல்லப்பள்ளி, ஒரப்பம், கெலமங்கலம் ஆகிய 8 கால்நடை சந்தைகள் இரு  வாரங்களுக்குச் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும், பக்கத்து மாநிலங்களிலிருந்து கால்நடைகளைக் கொண்டு வருவதும், வெளியே கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கால்நடைகளுக்கு கோமாரி நோய் குறித்த அறிகுறிகள் தெரியவந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1077-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai