Enable Javscript for better performance
கோஷ்டி மோதல்:15 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    கோஷ்டி மோதல்:15 பேர் மீது வழக்குப் பதிவு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 17th November 2013 06:06 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி அருகே முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 15 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர்.

    கிருஷ்ணகிரி அருகேயுள்ள அவதானப்பட்டி பூசாரிக்கொட்டாயைச் சேர்ந்தவர் பெருமாள் (38). இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த திருப்பதிக்கும் அவதானப்பட்டி ஏரியில் மீன் பிடிக்க ஏலம் எடுப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம்.

    இதுதொடர்பாக, இரு தரப்பினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் கல்களை வீசித் தாக்கிக் கொண்டனராம். இதுகுறித்து பெருமாளின் மனைவி மாரி (38), திருப்பதி ஆகியோர் கிருஷ்ணகிரி அணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய உதவி காவல் ஆய்வாளர் வசந்தா இரு தரப்பைச் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    kattana sevai