சுடச்சுட

    

    பணம் கேட்டு மிரட்டல்: எஸ்பியிடம் பெண் புகார்

    By போச்சம்பள்ளி  |   Published on : 17th November 2013 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட்டிப் பணம் கேட்டு மிரட்டியதாக கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் புகார் அளித்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்த  ஞானேஸ்வரன் மனைவி உஷாராணி. இவர் கிருஷ்ணகிரி எஸ்.பி.யிடம் அளித்த புகார் மனு விவரம்:

    தனது கணவர் ஞானேஸ்வரனின் சகோதரர் வெங்கடாசலத்திடம் வட்டிக்குப் பணம் வாங்கினேன். இந்த நிலையில், நாங்கள் கொடுக்க வேண்டிய மீதி பணத்தை ஒரு மாதத்திற்குப் பிறகு தருகிறோம் என்று கூறினோம்.

    ஆனால், வெங்கடாசலம் மொத்த பணத்தையும் உடனடியாகத் தர வேண்டும் என்று கூறி, எங்கள் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறு செய்து, தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது மகன்கள் சரவணன், சக்திவேல் மற்றும் சிலர் எங்கள் வீட்டில் புகுந்து என்னையும் எனது கணவரையும் தாக்கியதுடன், வீட்டில் இருந்தப் பெண்களையும் அடித்து, தகாத வாரத்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai