சுடச்சுட

    

    மகளிர் விளையாட்டு : கிருஷ்ணகிரி, ஒசூர் அணிகள் வெற்றி

    By கிருஷ்ணகிரி  |   Published on : 17th November 2013 05:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் கிருஷ்ணகிரி, ஒசூர் அணிகள் வெற்றி பெற்றன.

    கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் 580 பேர் பங்கேற்றனர்.

    கூடைப்பந்து போட்டியில் கிருஷ்ணகிரி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியும், கபடியில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், டென்னிஸில் கிருஷ்ணகிரி டென்னிஸ் கிளப் அணியும், மேஜை பந்து போட்டியில் விளாங்கமுடி அரசு உயர்நிலைப் பள்ளியும், ஹாக்கியில் போச்சம்பள்ளி ஹாக்கி கிளப் அணியும் வெற்றி பெற்றன. கையெறி பந்து போட்டியில் ஒசூர் அசோக் லேலண்ட் அணியும்,  இறகுப் பந்தில் டைட்டன் அணியும், கோ-கோ, வாலிபால் போட்டிகளில் ஜான் போஸ்கோ அணியும் வெற்றி பெற்றன.

    தடகளம், குழுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பரிசுகளை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், உடல்கல்வி ஆய்வாளர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai