சுடச்சுட

    

    மத்தூரில் தேசிய குழந்தைகள் மாவட்ட மாநாடு

    By போச்சம்பள்ளி,  |   Published on : 17th November 2013 05:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்தூரில் நடைபெற்ற தேசியக் குழந்தைகள் மாவட்ட மாநாட்டில்,  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான 21-ஆவது தேசிய குழந்தைகள் மாநாடு நடைபெற்றது.  இதில், கோட்டூர் நடுநிலைப் பள்ளி, துறிஞ்சிப்பட்டி, நேர்லகட்டை ஆகிய பள்ளிகளின் மாணவர்கள் குழு மாநில அளவிலான ஆய்வுப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த மாநாட்டுக்கு, அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் வீரமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சேதுராமன், மாவட்டப் பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் துரைசாமி மாநாட்டைத் தொடக்கிவைத்து ஆய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினார்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன். குமார் மாநிலப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். மத்தூர் டச் டிரஸ்ட் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன.

    மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயபால், பெருமாள், ஜனார்த்தனன், ஆனந்தசுமதி, வசந்தி, சிவபிரகாசம், சங்கர் மற்றும் ஆசிரியர்கள் பலர்  மாநாட்டில் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai