சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், அதகப்பாடி ஊராட்சி மன்ற 1-ஆவது வார்டு உறுப்பினர் பச்சாகவுண்டர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதில்

    காயமடைந்த அவர் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

    கிருஷ்ணகிரி அருகே உள்ள அதகப்பாடி ஊராட்சி மன்ற 1-ஆவது வார்டு உறுப்பினர் பச்சாகவுண்டர் (40). சின்னகாம்பட்டியைச் சேர்ந்த இவர் இந்திய கம்யூ. கட்சியின் தருமபுரி ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார்.

    இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த ராமசாமிக்கும், அங்குள்ள தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம்.

    இந்த நிலையில், பச்சாகவுண்டர் தனது வீட்டின் அருகே கால்நடைக்கு தீவனம் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ராமசாமி, பச்சாகவுண்டரை அரிவாளால் வெட்டினாராம். இதில், பச்சாகவுண்டருக்கு தலை, கைவிரல் உள்ளிட்ட  இடங்களில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், பச்சாகவுண்டர் தன்னை தாக்கியதாகக் கூறி, ராமசாமியும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த போலீஸார், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai