சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

  கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கியதை முன்னிட்டு, சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், துளசி மலை அணிந்து விரத்தை தொடங்குவர். கிருஷ்ணகிரியில் உள்ள ஐய்யப்பன் கோயிலில் கார்த்திகை மாதம் 1-ஆம் தேதி எராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மாலை அணிந்தனர். குருசாமிகள் சிவதாஸ், கண்ணா, மனோஜ் ஆகியோர் பக்தர்களுக்கு மாலை அணிவித்து ஆசி வழங்கினர்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஜெகதேவி, ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு, ஐயப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai