சுடச்சுட

  

  கிருஷ்ணகிரியில் அனைத்திந்திய கூட்டுறவு வாழ விழா: ரூ.11 கோடி நலத்திட்ட உதவிகள் அளிப்பு

  By dn  |   Published on : 18th November 2013 06:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 60-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 130 பயனாளிகளுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

  இந்த நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். தருமபுரி மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஜெ.ஆனந்தி, தருமபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர் பி.என்.ஏ.கேசவன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் சு.தென்னரசு, கிருஷ்ணகிரி நகர் மன்றத் தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர் க.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இந்த நிகழ்ச்சியில் 130 பயனாளிகளுக்கு ரூ.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் 20 சிறந்த கூட்டுறவு ஒன்றியங்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

  கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai