சுடச்சுட

  

  குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம்: 82 குழந்தைகள் பங்கேற்பு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 18th November 2013 06:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக் குழு உறுப்பினர் டி.ஏகாம்பவாணன் தலைமை வகித்தார். சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை இருதய சிறப்பு மருத்துவர் முத்துக்குமரன், இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர்  பிறந்த குழந்தை முதல் 16 வயது நிரம்பிய குழந்தைகளுக்கு இருதயம் சம்பந்தமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

  இந்த முகாமில் பங்கேற்ற 82 குழந்தைகளுக்கு செய்யப்பட்ட பரிசோதனையின் 6 குழந்தைகள் இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்து செய்யப்பட்டனர். இந்தக் குழந்தைகளுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் இலவசமாக அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது.

  இந்த நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சியின் மாநில எஸ்சி பிரிவு துணைத் தலைவர் நடேசன், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் நாகராஜ் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai