சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே யானைகள் தாக்கியதில் 2 ஆடுகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    கர்நாடகத்திலிருந்து வந்த 108 யானைகள் ஒசூர் வனக் கோட்டத்தில் 4 குழுக்களாகப் பிரிந்து விவசாயிகள் பயிர் செய்துள்ள ராகி, நெல், முட்டைக் கோஸ், கேரட், கரும்பு உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில், போடூர்பள்ளத்தில் இருந்த 44 யானைகள் ஒட்டனூர் கிராமத்திற்குள் புகுந்தன. அங்கு முனிராஜ் வீட்டுக்கு அருகே ஆட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த இரு ஆடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசிக் கொன்றன. தொடர்ந்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால்ரெட்டி, ரமேஷ்ரெட்டி, ராமமூர்த்தி, அக்கம்மா, முத்துப்பாண்டி ஆகியோரின் 10 ஏக்கர் நிலங்களில் பயிர் செய்யப்பட்டிருந்த ராகி, நெல், சோளம், கரும்பு, காய்கறி பயிர்களை அழித்துச் சேதப்படுத்தின.

    இந்த யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினர் தொய்வடைந்துள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வனத் துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடவில்லை. யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 10 நாள்களாக சூளகிரி பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை உடனடியாக காட்டுக்குள் விரட்ட வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai