சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி அருகே ஆடு திருடியதாக இளைஞர்கள் இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி அருகே உள்ள மூக்கில்புதூரைச் சேர்ந்தவர் விவசாயி துரை(37). தன்னுடைய விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கணக்கிட்டபோது அதில் ஒரு ஆடு குறைவதை அறிந்தார்.

    இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரணை செய்ததில், இரண்டு இளைஞர்கள் ஆட்டை பிடித்து நடந்து செல்வது தெரிய வந்தது. இதையடுத்து துரை தனது உறவினர்களுடன் சேர்ந்து ஆட்டை திருடிச் சென்ற அந்த இளைஞர்களைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த இளைஞர்களிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள், பனந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (23), வெங்கடேஷ் (23) என்றும், அவர்கள் ஆட்டைத் திருடியது உண்மை என்றும் தெரியவந்தது.

      இதுகுறித்து வழக்குப் பதிந்த கிருஷ்ணகிரி வட்டாரப் போலீஸார், இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai