Enable Javscript for better performance
ஒசூரில் வீடுகளில் தொடர் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஒசூரில் வீடுகளில் தொடர் திருட்டு

    By ஒசூர்  |   Published on : 19th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |    |  

    ஒசூர் கோகுல் நகரில் 3 வீடுகளில் ஒரே நாளில் தொடர் திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ஒசூர் கோகுல் நகரில் தனியார் மினரல் வாட்டர் நிறுவனம் நடத்தி வருபவர் பட்டாபி.

    இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல, அலுவலகத்தை மூடிவிட்டு வீடு திரும்பினார்.

    திங்கள்கிழமை காலை அவர் அலுவலகத்துக்குச் சென்றபோது, அங்கு இருந்த ரூ. 80 ஆயிரம், 2 கேமரா, 2 மின் மோட்டார்களைக் காணவில்லை.

    அலுவலகத்தில், ஜன்னலை உடைத்து உள்ளேப் புகுந்த

    மர்ம நபர்கள் அங்கிருந்த பணம், பொருள்களைத் திருடியது தெரிய வந்தது.

    மற்றொரு சம்பவம்: அதேப் பகுதியைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் நாகராஜ். இவர் வீட்டில் மின் விசிறி உள்ளிட்ட பொருள்கள்  திருடுபோயின.

    இவரது வீட்டின் அருகே நின்ற காரில் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்த முக்கிய ஆவணங்கள், வங்கி ஏடிம் கார்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

    ஒசூர் நகர காவல் நிலையத்தில் பட்டாபி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai