Enable Javscript for better performance
கார் - லாரி மோதல்: ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    கார் - லாரி மோதல்: ஒருவர் சாவு

    By கிருஷ்ணகிரி  |   Published on : 19th November 2013 04:15 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி அருகே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் சென்ற கார் மீது லாரி  மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

     4 பேர் காயம் அடைந்தனர்.

    கர்நாடக மாநிலம், பெங்களூரு உலிமாவு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (54). இவர் தனது நண்பர்களான மஞ்சுநாத் நகரைச் சேர்ந்த எஸ்.ரமேஷ், லால்பாக் சாலையைச் சேர்ந்த வி.ரமேஷ், ஆசாத் நகரைச் சேர்ந்த ஜெ.பி.ரமேஷ், நாகசந்திராவைச் சேர்ந்த சிவபிரசாத் (37) ஆகியோர் திருவண்ணாமலையில் நடைபெற்ற மகாதீபத்தை தரிசிக்க ஒரு காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றனர்.

    கார் கிருஷ்ணகிரியைக் கடந்து பெரியபனமுட்லு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் நண்பர்கள் 5 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும்  தீவிர சிகிச்சைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிவபிரசாத் உயிரிழந்தார்.

    இந்தச் சம்பவம் குறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநர்களைத் தேடி வருகின்றனர்.

    kattana sevai