சுடச்சுட

    

    கோயில் பூஜைக்கான சங்கை  மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் மனு

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 19th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மலாபுரம் கிராமத்தில் உள்ள கோயில் பூஜைக்கான சங்கை மீட்டுத் தரக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கும்மலாபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியது: கும்மலாபுரத்தில் உள்ள பஜனை கோயிலுக்கு சொந்தமான சங்கை பூஜைக்கு பயன்படுத்தினர்.

    இந்தச் சங்கை அதேப் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் வெங்கடராஜ் பாதுகாத்தார்.

    கோயில் பூஜைக்கு தேவைப்படும்போது, அந்தச் சங்கை அவரிடமிருந்து பெற்று, பின்னர் அவரிடமே ஒப்படைப்பது வழக்கம். தற்போது அந்தச் சங்கை காணவில்லை என வெங்கடராஜ் கூறி வருகிறார்.

    வெங்கடராஜ் அந்தச் சங்கை விற்பனை செய்ததாகத் தெரிகிறது. வெங்கடராஜ் மீது நடவடிக்கை எடுத்து, அந்தச் சங்கை மீட்டுத் தர  வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai