சுடச்சுட

  

  சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் நவ.28-இல் வருகை

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 19th November 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பேராயர் எம். பிரகாஷ் வருகிற 28-ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதாக, மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பேராயர் எம்.பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள் வரும் 28-ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு வருகின்றனர்.

  சிறுபான்மையினர் சமூகத்  தலைவர்களையும், சிறுபான்மையினர் பிரிவின் மக்கள் பிரதிநிதிகளையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் சந்தித்து, தமிழக அரசின் நலத் திட்டங்கள் குறித்து கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிய உள்ளார்.

  அப்போது, சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் ஆணையக் குழுவினரைச் சந்தித்து குறைகளையும், அரசின் நலத் திட்டங்கள் குறித்த கருத்துகளையும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai