சுடச்சுட

    

    சொட்டு நீர்ப் பாசன விளைநிலம்: தோட்டக்கலை ஆணையர் ஆய்வு

    By ஒசூர்  |   Published on : 19th November 2013 05:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒசூர் பகுதியில் 100 சத மானிய விலையில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்கப்பட்ட விளைநிலங்களை தோட்டக் கலைத் துறை ஆணையர் சத்திய பிரதா சாகு திங்கள்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேசியத் தோட்டக் கலைத் துறை இயக்கம், தேசிய ஒருங்கிணைந்த வேளாண்மை அபிவிருத்தி திட்டம், தேசிய நுண்ணீர்ப் பாசன இயக்கம் ஆகியவை சார்பில், 100 சத மானியத்தில் சொட்டு நீர்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் கீழ், சொட்டு நீர்ப் பாசனத்தில் உருளைக் கிழங்கு சாகுபடி செய்த கட்டூர் கிராமத்தை தோட்டக் கலைத் துறை ஆணையர் ஆய்வு செய்தார். மேலும், தோட்டக் கலைத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் பசுமைக் குடில், உயர்தொழில் நுட்ப முறையில் செயல்படுத்தப்படும் ஜெர்பரா, ரோஜா, கார்னேசன் வயல்களைப் பார்வையிட்டார். தளி, கொத்தனூர், எலுவப்பள்ளி, பூனப்பள்ளி, பேளகொண்டப்பள்ளி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யும் விளைநிலங்களையும் அவர் நேரில் பார்வையிட்டார். ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக் கலைத் துறை இயக்குநர் பெரியசாமி, துணை இயக்குநர் காளியப்பன், உதவி இயக்குநர்கள் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai