சுடச்சுட

  

  போச்சம்பள்ளி ஸ்ரீ சோமேஸ்வரர் கோயிலில், கார்த்திகையை முன்னிட்டு, மகா தீபம் ஏற்றப்பட்டதுடன், ஏராளமான பக்தர்களும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் ஸ்ரீ சோமேஸ்வரர் கோயில் உள்ளது.

  கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

  மாலை சொற்பொழிவாளர் தகடூர் புஞ்சை ஸ்ரீமகாகவி லோகநாத சுவாமிகள், பொன்னுசாமி பாகவதர், நந்தசாமி ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

  அர்ச்சகர்கள் சீனிவாசன், சிவமுனுசாமி ஆகியோர் மாலை மகா தீபத்தை ஏற்றினர்.

  முன்னதாக, கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாண வேடிக்கைகள் முழங்க, பக்தர்கள் 5004 அகல் விளக்குகளை ஏற்றினர்.

  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அலமேலுநாராயணன் அன்ன தானம் வழங்கினார். ஏற்பாடுகளை மத்தூர் சிவனடி பக்தர் குழுவினர் செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai