சுடச்சுட

  

  மாணவர்கள் வாய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கலால், சுங்கத் துறை கூடுதல் ஆணையர் ஆர்.சரவணகுமார் வலியுறுத்தினார்.

  சுவாமி தயானந்த சரஸ்வதியின் எய்ம்பார் சேவா அமைப்பின் 100-ஆவது குழந்தைகள் காப்பகம் உத்தரபிரதேச மாநிலம், லக்னெüவில்  திறக்கப்படவுள்ளது.

  இதையொட்டி, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோட்டூரில் அகில இந்திய சேவா சங்கம், எய்ம்பார் சேவா அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கு நன்னெறி போதித்தல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விழாவில் கலால், சுங்கத் துறை கூடுதல் ஆணையர் ஆர்.சரவணகுமார் பேசியது:

  ஆதரவற்ற மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் வரும் வறுமையால் துவண்டுவிடக் கூடாது. அதைக் கடின உழைப்புடன் எதிர்கொண்டு வெல்ல வேண்டும். கடின உழைப்பு, விடாமுயற்சியால் சவால்களை சாதனைகளாக்க முடியும்.  வாழ்க்கையில் உயர்வடைய உழைக்கும் அதேசமயம், ஒழுக்கத்தைப் பின்பற்றுவது அவசியம்.

  எய்ம்பார் சேவா மையம் போதிக்கும் உயரிய நன்னடத்தைகளை மாணவர்கள் பின்பற்றிட வேண்டும்.

  மாணவர்கள் தங்களது வாழ்க்கையில் உண்மையை மட்டும் பேசி, வாய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

  இதில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  எய்ம்பார் சேவா மைய ஒருங்கிணைப்பாளர் விஸ்வப்ரியானந்த சரஸ்வதி சுவாமிஜி மற்றும் சேவா மைய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai