சுடச்சுட

    

     பள்ளி மைதானத்தில் சீர்கேட்டைத் தடுக்க ஆட்சியரிடம் மதிமுக மனு

    Published on : 20th November 2013 03:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும், அவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி மதிமுக நகர செயலாளர் ஆர். அசோக்குமார்ராவ் ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் மனு அளித்தார்.

    மனு விவரம்: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம் பகலில் பள்ளி மாணவர்கள் விளையாடும் இடமாகவும், அதிகாலை, மாலை நேரங்களில் பொதுமக்களின் நடை பயிற்சிக்கும் பயன்படுகிறது.

    இந்த விளையாட்டு மைதான வளாகத்தில் இரண்டு மாணவர்கள் விடுதிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்களும் உள்ளன.

    இந்த நிலையில், இந்த மைதானத்தில் இரவு நேரங்களில் பல சமூகச் சீர்கேடுகள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai