சுடச்சுட

  

  ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள்களுக்கு காற்று நிரப்பும் இயந்திரம் வழங்கும் விழா நடைப்பெற்றது.

  முன்னாள் மாணவ சங்கத் தலைவர் சென்னகிருஷ்ணன் மகன் பாலாஜி ரூ. 40,000 மதிப்புள்ள சைக்கிள்களுக்கு காற்று நிரப்பும் கருவிகளை ஆண்கள், பெண்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்.

  விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியர் பி.பொன்னுசாமி தலைமை வகித்தார். பெண்கள் பள்ளி தலைமையாசிரியர் யுவராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் முஷாபர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளம் செஞ்சிலுவைச் சங்க ஆசிரியர் கு.கணேசன் வரவேற்றார். உதவித் தலைமையாசிரியயை நிர்மலா சிதம்பரம் பேசினார்.

  பெற்றோர் -ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.  பெண்கள் பள்ளி ஆசிரியர் ஆனந்த் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai