சுடச்சுட

  

  மது போதையில் தலைமைக் காவலர், உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் போலீஸார் கைது செய்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ரவி (30). இவர் திங்கள்கிழமை மது போதையில் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்று, ஊத்தங்கரை காவல் நிலையம் முன்னுள்ள கொடி மரத்தில் மோதி கீழே விழுந்தார்.

  அங்கு பணியிலிருந்த தலைமைக் காவலர் மாதையன் ஓடிச் சென்று ரவியை தூக்க முயன்றார். அப்போது, அவரை ரவி தகாத வார்த்தையால் திட்டினாராம். அப்போது, அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகனையும் ரவி திட்டினாராம். மேலும், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாராம்.

  இதுகுறித்து மாதையன் அளித்த புகாரின் பேரில், உதவி ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்து ரவியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். பின்னர், சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai