சுடச்சுட

    

    விவசாய கிணற்றில் மின் மோட்டாரைத் திருடியதாக இருவரை போச்சம்பள்ளி போலீஸார் செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், மகாதேவகொல்லஹள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ரேணுகா. இவருக்குச் சொந்தமான விவசாய கிணற்றிலிருந்த 7.5 எச்.பி. மின் மோட்டாரை திங்கள்கிழமை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.15,000.

    இதுகுறித்து ரமேஷ் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீஸார், வேலூர் மாவட்டம், ஜங்கலாபுரத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் குப்பன் (31), ஜெயராமன் மகன் ரமேஷ் (29) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai