சுடச்சுட

  

  "ஆட்சி மொழி வளர அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்

  By 'கிருஷ்ணகிரி  |   Published on : 21st November 2013 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆட்சி மொழி வளர அலுவலர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என, கிருஷ்ணகிரியில் புதன்கிழமை தொடங்கிய ஆட்சி மொழிப் பயிலரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

  கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சி மொழிப் பயிலரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

  இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியம் பேசியது:

  தமிழ் மொழி தொன்மையான மொழியாகும். பண்டைய கால அறிஞர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் தங்களது படைப்புகளை அழகு தமிழிலேயே படைத்தனர். தமிழர்களுக்கு ஆட்சி மொழி தமிழ் மொழியாகும்.அலுவலக நிர்வாக நடைமுறையில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்கம் முழுமையாக 100 சதம் தமிழில் மட்டுமே அமைய வேண்டும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அனைத்து இனங்களிலும் தமிழிலேயே ஒப்பமிடல் வேண்டும்.

  பிற மாநில அலுவலகங்கள், நீதி மன்றங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், ஆங்கிலத்தில் செய்தி தொடர்பு வைத்துள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எழுதப்படும் கடிதங்கள் தவிர அனைத்து இனங்களும் தமிழில் மட்டுமே அமையப் பெற வேண்டும் என்றார்.

  மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சி மொழி வரலாறு, சட்டம் மற்றும் ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள் குறித்து கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ப.அன்புச் செழியர் பேசினார்.

  இதில், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ப.கோவிந்தராசு மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai