Enable Javscript for better performance
கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

    By ஒசூர்  |   Published on : 21st November 2013 05:57 AM  |   அ+அ அ-   |    |  

    பாகலூர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த தொழிலாளி கட்டடத்திலிருந்து கீழே விழுந்ததில்

    புதன்கிழமை உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (34). இவர் பாகலூரில் துணி தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்தாராம். தொழில்சாலை கட்டடத்தின் மேல் ஏறி புதன்கிழமை வேலை செய்த போது, கால் தவறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவர், பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், பாகலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai