சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் செல்வகணபதி எம்.பி. ஆஜர்

    By கிருஷ்ணகிரி  |   Published on : 21st November 2013 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் டி.எம்.செல்வகணபதி எம்.பி. புதன்கிழமை ஆஜரானார்.

    கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே திமுக சார்பில் கடந்த மே 15-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்தக் கட்சியின் தேர்தல் பணிச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி எம்பி. பேசினார்.

    அப்போது அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரசு வழக்குரைஞர் கதிரேசன், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யூசூப் அலி, செல்வகணபதி எம்.பி.யை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக செல்வகணபதி எம்.பி. நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானார். வழக்கு விசாரணையை டிச.19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai