Enable Javscript for better performance
குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகள் தின விழா ஓவியப் போட்டி

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 21st November 2013 05:55 AM  |   அ+அ அ-   |    |  

    அருங்காட்சியகத் துறையின் சார்பில், குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

    கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றப் போட்டியை அருங்காட்சியகக் காப்பாளர் செ.கோவிந்தராஜ் தொடக்கி வைத்தார். போட்டியில் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    6,7,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "இயற்கைக் காட்சிகள்'  என்ற தலைப்பிலும், 9,10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "தான் விரும்பும் சுற்றுலாத் தலம்' என்ற தலைப்பிலும், 11, 12-ஆவது வகுப்பு மாணவர்களுக்கு "நான் விரும்பும் தேசத் தலைவர்' என்ற தலைப்பிலும் போட்டிகள் நடைபெற்றன. ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் பொன். குமார் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

     

    kattana sevai