சுடச்சுட

    

    கோமாரி நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர் அறிவுரை

    By கிருஷ்ணகிரி  |   Published on : 21st November 2013 05:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோமாரி நோய் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என, அரசு அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரிமாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய்த் தடுப்புப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சித் துறை சார்பில், புதன்கிழமை நடைபெற்ற நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமை வகித்துப் பேசியது:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோமாரி நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த நோயை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் நோய்த் தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுவில் இணைந்துள்ள துறைகளும் தங்களது துறை சார்பில் பணியாற்ற வேண்டும்.

    குறிப்பாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் கால்நடைகள் உள்ள இடங்களில் பிளீச்சிங் பவுடர் தினமும் தெளிக்க வேண்டும். நீர் நிலைகள் உள்ள இடங்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். 

    நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டாலோ அல்லது கிடைக்கப் பெற்றாலோ அலுவலர்களே கால்நடை மருத்துவர்களை அணுகி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  மேலும், அனைத்துக் கால்நடைகளுக்கும் தவறாமல் தடுப்பூசி போட வேண்டும்.

    நோய் தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றார் அவர்.

    இதில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) கோபாலகிருஷ்ணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பெ.பெரியசாமி மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல்அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai