சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி கோட்டத்துக்குள்பட்ட காவேரிப்பட்டணம், குட்டிகவுண்டனூர் துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (நவ.21) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின்நிறுத்தம் செய்யப்படுவதாக உதவிச் செயற்பொறியாளர் பி.மு.ராஜேந்திரன் தெரிவித்தார்.

  மின் நிறுத்தம்

  செய்யப்படும் பகுதிகள்

  காவேரிப்பட்டணம் நகரம், வீட்டு வசதி வாரியம், தளிப்பட்டி, பாளையம், தேர்பட்டி, ஜெகதாப், சவுளூர், நரிமேடு, மோரனஅள்ளி, பன்னிஅள்ளி, தளியூர், கதிரிபுரம், தொட்டிப்பள்ளம், போடரஅள்ளி, கொத்தலம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  நாகரசம்பட்டி, வேலம்பட்டி, ஜெககேவி துணை மின் நிலையங்களில் வியாழக்கிழமை (நவ.21) மின் நிறுத்தம் செய்யப்படுவதாக, போச்சம்பள்ளி கோட்டப் பொறியாளர் மயில்சாமி தெரிவித்தார்.

  மின் நிறுத்தம் செய்யும் பகுதிகள்

  வேலம்பட்டி, வேங்கானூர், மாமரத்துப்பட்டி, பாலேகுளி, தட்டக்கல், நாகரசம்பட்டி, செல்லம்பட்டி, எருமாம்பட்டி, பெரியமலை, தேவீரஹள்ளி, மொரசப்பட்டி, பேருஹள்ளி, ஜெகதேவி, சத்தலப்பள்ளி, ஜீ.என்.மங்கலம், கெல்லப்பட்டி, அச்சமங்கலம், பாகிமானூர், கொண்டப்பநாயனப்பள்ளி, பண்டசீமனூர், தொகரப்பள்ளி, மஜீத்கொல்லஹள்ளி, ஐகுந்தம், மோடிக்குப்பம், அஞ்சூர், செந்தாரப்பள்ளி, நாயக்கனூர், சந்தூர், கட்டகரம், வெப்பலாம்பட்டி, தொப்படிக்குப்பம், பட்டகப்பட்டி, கெங்காவரம், அனகோடி, எம்.ஜி.அள்ளி, ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai