சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 28-ஆம் தேதி, ராயக்கோட்டையில் தமிழக விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னஉள்ளுகுறுக்கையில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், அதன் மாநிலப் பொதுச் செயலாளர் கே.எம்.ராமகவுண்டர் தலைமையில் நடைபெற்றது.  இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ரகமத்ஜான், மாவட்ட நிர்வாகிகள் கே.அசோக்குமார், நசீர் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இதில், விவசாயத் தேவைக்கு ஏரியிலிருந்து வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும். சின்ன உள்ளுகுறுக்கை ஏரியிலிருந்து சிக்கன்னஏரிக்கு பாசனக் கால்வாய் அமைக்க வேண்டும். யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரமும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும்.

  வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை, மா மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28-ஆம் தேதி ராயக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai