சுடச்சுட

  

  ஒசூர் அருகே இளம் பெண்ணைக் கொடுமை செய்ததாக கணவர், மாமியாரை மகளிர் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

  கர்நாடக மாநிலம், பில்லாபுரத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (31). இவருக்கும் பாகலூர் அருகே உள்ள முகலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சுமாவுக்கும் (32) 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

  பாலச்சந்திரனும், அவரது தாய் நாகரத்தினாவும் சுமாவை வரதட்சிணைக் கேட்டு கொடுமை செய்ததாகவும், குழந்தை இல்லாதததால் பாலசந்திரனுக்கு இரண்டாவது திருமணம் செய்ததுடன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சுமா ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து ஆய்வாளர் சித்ராதேவி புதன்கிழமை வழக்குப் பதிந்து பாலச்சந்திரன், அவரது தாய் நாகரத்தினம்மா ஆகிய இருவரையும் கைது செய்தார். பின்னர், இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai