சுடச்சுட

    

    ஊத்தங்கரை அருகே பெண்ணை வெட்டிக் கொன்றதாக, கூலித் தொழிலாளியை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சாலம்மாள் (42). 15 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன் இறந்து விட்டார்.

    சாலம்மாள் மட்டும் தனியாக வசித்தார். இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி மர்மமான முறையில் அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சாமல்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில், புதன்கிழமை  கிராம நிர்வாக அலுவலர் ஆசைதம்பியிடம் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவலிங்கம் சாலம்மாளை கொலை செய்ததாகக் கூறி சரணடைந்தார். அவரை போலீஸர் புதன்கிழமை கைது செய்து விசாரித்தனர்.

    இதில், சாலம்மாள் கணவர் இறந்தது முதல் அவருக்கும், தனக்கும் தொடர்பு இருந்ததாகவும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்ததால் வெட்டிக் கொன்றதாகவும் போலீஸாரிடம் தெரி

    வித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai