சுடச்சுட

  

  மின் கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மக்கள் பீத

  By போச்சம்பள்ளி  |   Published on : 21st November 2013 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  போச்சம்பள்ளி அருகே நான்கு மின் கம்பங்கள் அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த விளங்காமுடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இந்த மின் கம்பங்களில் சிமென்ட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் எலும்புக் கூடாக காட்சியளிக்கின்றன. செவ்வாய்க்கிழமை மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததது. இதில், மாரியம்மன் கோயில் அருகேயுள்ள மின் கம்பம் ஒன்று  சரிந்து விழுந்தது.

  அதைத் தொடர்ந்து இருந்த மூன்று மின் கம்பங்களும் பாரம் தாங்காமல் அடுத்தடுத்து சரிந்து விழுந்தன. மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தததால், விபத்து ஏதும் ஏற்படவில்லை. இதனால், கிராம மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

  இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

  இந்தக் கிராமத்தில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்றக் கோரி கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் நதியா காமராஜ் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன், சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து,போச்சம்பள்ளி கோட்டப் பொறியாளர் மயில்சாமி கூறியது:

  மின் கம்பம் சரிந்து விழுந்தது எனக்குத் தெரியாது. இருப்பினும் மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்  என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai