Enable Javscript for better performance
\\\"விடுதியில் தங்கும் வெளிநாட்டினர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "விடுதியில் தங்கும் வெளிநாட்டினர் விவரங்களை தெரிவிக்க வேண்டும்'

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 21st November 2013 05:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர்களின் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என, ஹோட்டல் உரிமையாளர்களை மாவட்ட எஸ்.பி. எஸ்.ஆர். செந்தில்குமார் கேட்டுக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட எஸ்பி. எஸ்.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    விடுதி, ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர்களின் விவரங்களை ஆன்லைன் மூலம் தெரிவிப்பது குறித்து கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தைச் சேரந்த துணைக்  கண்காணிப்பாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai