சுடச்சுட

  

  அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி விவசாயி சாவு

  By கிருஷ்ணகிரி  |   Published on : 22nd November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற விவசாயி அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.

  வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஓண்டியூரைச் சேர்ந்த சின்னமல்லப்பா மகன் சங்கர் (35). விவசாயி. இவரது தோட்டத்தில் அறுவடை செய்த தக்காளியை வேப்பனப்பள்ளி சந்தையில் விற்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

  அந்தச் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் நிலையம் அருகே சென்ற போது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றார்.

  அப்போது எதிர்திசையில் தனியார் பேருந்து வருவதைக் கண்ட அவர், நிலைதடுமாறி அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த சங்கர், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவயிடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai