சுடச்சுட

  

  ஒசூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  மாநாடு நகரத் தலைவர் ஆதி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  மாநிலத் தலைவரும் தளி சட்டப்பேரவை உறுப்பினருமான டி.ராமச்சந்திரன் பேசியது:

  இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை கிடைக்காததால், தவறானப் பழக்கங்களுக்கு ஆளாகின்றனர். இதனால், சமுதாய சீர்கேடு ஏற்படுகிறது.

  இதைத் தடுக்க இலவசக் கல்வி, வேலை வாய்ப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என்றார்.

  மாநிலச் செயலாளர் ரா. திருமலை, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் டி.எல்.நாகராஜ், செயலாளர் எ.கே.முருகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  ஒசூர் சிப்காட் தொழில்சாலைகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வைத்து விதிமுறைகளுக்கு மாறாக வேலை வாங்குவதைத் தவிர்த்து ஒசூர் பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

  ஒசூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேன்டும், ஒசூரிலிருந்து கிருஷ்ணகிரி, ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு ரயில் பாதை அமைத்து தாமதமின்றி ரயில் போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கே.கிருஷ்ணப்பா நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai