சுடச்சுட

    

    ஓட்டுநரைக் கொன்று லாரியை கடத்தியதாக 2 இளைஞர்கள் கைது

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 22nd November 2013 05:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிருஷ்ணகிரி அருகே லாரி ஓட்டுநரைக் கொன்று, இரும்பு பாரம் ஏற்றிய லாரியைக் கடத்தியதியதாக, இரண்டு இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரியை அடுத்த கந்திக்குப்பம் அருகே கடந்த ஜூலை மாதம் சாலையோரத்தில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வீரசெட்டிப்பள்ளியைச் சேர்ந்த ரவிக்குமார் (30) என தெரிய வந்தது.

    லாரி உரிமையாளரும், ஓட்டுநருமான ரவிக்குமார், ஓசூரிலிருந்து சென்னைக்கு இரும்பு குழாய் பாரம் ஏற்றிய லாரியை ஓட்டிச் சென்ற போது கந்திகுப்பம் அருகே மர்மநபர்கள் அவரைக் கொன்று, ரூ.10 லட்சம் மதிப்பிலான இரும்புக் குழாய்களுடன் லாரியைக் கடத்தியது தெரிய வந்தது.

    இதுகுறித்து தனிப் படை போலீஸார் விசாரணை செய்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக கெலமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார் (27), தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தமிழ்அரசு (25) ஆகிய இரு இளைஞர்களை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai