சுடச்சுட

  

  "குழந்தைகளின் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெற பெற்றோரிடம் விழிப்புணர்வு இல்லை'

  By கிருஷ்ணகிரி  |   Published on : 22nd November 2013 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகளின் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறுவது குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு இல்லை என்று சைல்ட் லைன் அமைப்பினர் தெரிவித்தனர்.

  இதுகுறித்து கிருஷ்ணகிரியில் சைல்ட் லைன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன குமாரி செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சைல்ட் லைன் அமைப்பு மூலம் கடந்த ஓராண்டில் மருத்துவ உதவி தேவைப்படும் 6 குழந்தைகள், பாலியல் தொல்லையிலிருந்து காக்க 28 குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கியது என மொத்தம் 383 குழந்தைகள் உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

  சைல்ட் லைன் அமைப்பின் 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து கிராமங்களிலும், பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் பிரச்னைகளுக்கு ஆலோசனை பெறுவது குறித்து அவர்களின் பெற்றோர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றார் அவர்.

  பேட்டியின் போது, குழந்தைகள் நல குழுமத்தின் தலைவர் வின்சென்ட் சுந்தர்ராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, ஜலாலுதீன், வெங்கடேசன், ஜெகதீஸ்வர ராவ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  குழந்தைகள் தின விழாவையொட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai