சுடச்சுட

  

  டிராக்டர்களை ஜப்தி செய்வதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 22nd November 2013 05:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேசிய வங்கிகள் டிராக்டர்களை ஜப்தி செய்வதைத் தடுத்து நிறுத்தக் கோரி, மாவட்ட டிராக்டர் விவசாயிகள் சங்கத்தினர், ஆட்சியர் டி.பி.ராஜேஷிடம் வியாழக்கிழமை மனு அளித்தனர்.

  மாவட்டத் தலைவர் கே.ஜி.நீலகண்டன் தலைமையில் அளித்த மனுவில் கூறியுள்ளது:

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயக் கடன் பெற்றனர். மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை பொய்த்ததால் உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. மேலும், தமிழக அரசு 31 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில், விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.

  இந்த நிலையில், வங்கியாளர்கள் தனியார் முகவர்கள் மூலம், கடன் பெற்ற விவசாயிகளுக்குச் சொந்தமான டிராக்டர்களை ஜப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்கின்றனர். இதனால், விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியாளர்கள் ஜப்தி நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai