சுடச்சுட

  

  காவேரிப்பட்டணத்தில் தேசிய கொடிநாள் விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

  காவேரிப்பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய கொடி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஆர்.செந்தில்குமார் கொடி அசைத்து தொடக்கிவைத்தார்.

  இதில், பள்ளித் தலைமையாசிரியை ராஜேஸ்வரி, எர்ரஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் சக்திவேல், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் விக்ரம்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளியில் தொடங்கியப் பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியிலேயே நிறைவு பெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai