சுடச்சுட

  

  பெண் கொலை வழக்கில்  விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

  By கிருஷ்ணகிரி  |   Published on : 22nd November 2013 05:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொடு த்த கடனை திரும்பக் கேட்ட பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

  கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள பி.குருபரப்பள்ளியைச் சேர்ந்தவர் அஞ்சப்பா. இவரது மனைவி ஜெயம்மா (50).

  கணவரால் கைவிடப்பட்ட இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணப்பாவுக்கும் தொடர்பு இருந்து வந்ததாம். மேலும், இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல்- வாங்கல் இருந்தது.

  இந்த நிலையில், கடனாகப் பெற்ற ரூ.3 லட்சத்தை திருப்பித் தருமாறு கிருஷ்ணப்பாவிடம் ஜெயம்மா கேட்டாராம்.

  இதையடுத்து, 25-3-2011 முதல் ஜெயம்மாவை காணவில்லை. இந்த நிலையில், அவரது சடலம் 4-4-2011 அன்று அங்குள்ள வனப் பகுதியில் கிடப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது.

  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், பண பிரச்னையில் ஜெயம்மாவை கிருஷ்ணப்பா கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

  கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி எல்.யூசூப் அலி முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த அவர், கிருஷ்ணப்பாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai