சுடச்சுட

  

  வனவிலங்குகளைக் கட்டுப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 22nd November 2013 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

  கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்தில் பேசிய விவசாயிகள் மாவட்டத்தில் காட்டு யானைகள், பன்றிகள் விளை நிலங்களில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து ஆட்சியர் டி.பி.ராஜேஷ் பேசியது:

  வன விலங்குகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

  விவசாயி ஜோதிக்கண்ணன் தகுதியான விவசாயிகளுக்கு உழவர் அட்டை வழங்க வேண்டும் என்றார்.

  மேலும், தனியார் பால் கொள்முதல் நிலையங்களை வரைமுறைபடுத்த வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட மா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.

  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ப.மந்திராசலம், வேளாண் துறை இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai