சுடச்சுட

    

    அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 23rd November 2013 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சி மொழியை 100 சதம் செயல்படுத்த அரசு அலுவலர்கள் முன்வர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் கேட்டுக் கொண்டார்.

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கு, ஆட்சிமொழி பயிலரங்கில் பங்கேற்ற அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் பேசியது:

    தமிழக அரசு தமிழ் அறிஞர்களுக்கான ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. ஆங்கிலம் அறிவியல் சார்ந்த மொழியாக உலக அளவில் உள்ளது.

    அதேபோல, தமிழ் மொழியும் வளர அறிவியல் சார்ந்த புதுமையைப் புகுத்தி வளர்க்க வேண்டும்.

    அரசு அலுவலகங்களில் அனைத்து இனங்களும் தமிழில் மட்டுமே கோப்புகள் அமைய வேண்டும்.

    தமிழ் ஆட்சி மொழியை 100 சதம் செயல்படுத்த அரசு அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ஆட்சியர் டி.பி.ராஜேஷ்.

    நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு.சேகர், சேலம் மண்டல தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மு.ராஜேந்திரன், தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் உதவி இயக்குநர் ஆறுமுகம், வரலாற்று ஆய்வாளரும், பதிப்பாசிரியருமான சுகவன முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ப.கோவிந்தராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai