Enable Javscript for better performance
ஆதிதிராவிடர் நலக் குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஆதிதிராவிடர் நலக் குழுக் கூட்டம்

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 23rd November 2013 05:36 AM  |   அ+அ அ-   |    |  

    கிருஷ்ணகிரி மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் டி.பி.ராஜேஷ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு சிமென்ட் சாலைகள் அமைக்க வேண்டும். மயான பாதை வசதி, தொகுப்பு வீடுகளை பராமரித்தல், வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கான தனி சமுதாயக் கூடம் உள்ளிட்டவை குறித்து உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இந்தப் பணிகளை 3 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    kattana sevai