சுடச்சுட

  

  ஆற்றில் பாலம் கட்டப்படாததால் மாணவ, மாணவிகள் அவதி

  By ஒசூர்  |   Published on : 23rd November 2013 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படாததால், பள்ளி மாணவ, மாணவிகள் ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை உள்ளது.

  சூளகிரி அருகே ஆழியாளம், போடூர்பள்ளம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காமன்தொட்டி உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

  போடூர்பள்ளத்திலிருந்து காமன்தொட்டிக்கு செல்ல தென்பெண்ணை ஆற்றை கடந்து செல்ல வேண்டும்.

  ஆற்றைக் கடந்து செல்ல பாலம் கட்டப்படாததால், கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீரில் இறங்கி ஆற்றைக் கடக்கின்றனர்.

  மழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வந்தால் சுமார் 8 கி.மீ. தொலைவு சுற்றி காமன்தொட்டிக்கு செல்ல வேண்டும்.

  எனவே, ஆழியாளம், போடூர்பள்ளம் கிராம மக்கள், பள்ளி மாணவ,  மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai