சுடச்சுட

  

  இலவச தொழில் பயிற்சி: நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 23rd November 2013 05:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இலவச தொழில் பயிற்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.விஜயகுமார் தெரிவித்தார்.

  இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  கிருஷ்ணகிரி நீர்தேக்கத்தின் அருகேயுள்ள இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் டி.டி.பி. கணினிப் பயிற்சி, காளான் வளர்ப்பு, வீட்டு உபயோகப் பொருள்கள் பழுதுநீக்கும் பயிற்சி, தேனீக்கள் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு ஆகிய பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

  பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு சான்றிதழ்களும், சுயதொழில் தொடங்க ஆலோசனைகள், வழிகாட்டுதல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச சேவையாக வழங்கப்படும். விருப்பமுள்ள 18 வயது முதல் 45 வயது வரையுள்ளவர்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

  மேலும், விவரங்களுக்கு இயக்குநர், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், கிருஷ்ணகிரி அணை, கிருஷ்ணகிரி மாவட்டம் என்ற முகவரியிலோ அல்லது 04343-240500, 9442247921 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai