சுடச்சுட

  

  கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தர்னா

  By கிருஷ்ணகிரி,  |   Published on : 23rd November 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிருஷ்ணகிரியில் கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் சார்பில் வெள்ளிக்கிழமை தர்னா நடைபெற்றது.

  கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலையின் எதிரே நடைபெற்ற தர்னாவுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.பி.சாவித்திரி தலைமை வகித்தார்.

  மாநில பொதுச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டச் செயலாளர் ஏ.குணவதி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.அகோரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பணி பளுவைக் குறைத்து துணை மைய காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கூடுதல் பகுதி சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

  பொது சுகாதாரத் துறையில் களப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் பாலின பாகுபாட்டில் ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குவதை கைவிட வேண்டும்.

  குடும்ப நலம், பிரசவம் ஆகியவற்றிற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்படுவதை கைவிட வேண்டும்.

  துணை மையங்களுக்கு இலவச மடிக் கணினி வழங்க வேண்டும். ஊதிய தினத்திலேயே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்னா நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai