சுடச்சுட

  

  கிருஷ்ணகிரி நகரில் உள்ள நேதாஜி சாலையில் வேகத் தடை அமைக்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

  கிருஷ்ணகிரி நகரில் பழையபேட்டையில் உள்ளது நேதாஜி சாலை. இந்தச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தச் சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பகலில் இந்தச் சாலையை சிறுமி கடக்கும் போது, மோட்டார் சைக்கிள் மோதியதாம். இதைத் தொடர்ந்து, அடிக்கடி விபத்துகள் நிகழும் இந்தப் பகுதியில் வேகத் தடை அமைக்கக் கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தகவல் அறிந்த கிருஷ்ணகிரி நகரப் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினர். விரைவில் சாலையில் வேகத் தடை அமைக்கப்படும் என அவர்கள் அளித்த உறுதியை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai