சுடச்சுட

    

    வேலை உறுதி திட்டப் பணி:விவசாயிகள் சங்கம் கோரிக்கை

    By கிருஷ்ணகிரி,  |   Published on : 23rd November 2013 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊரக வேலை உறுதி திட்டப் பணியை 200 நாள்களாக உயர்த்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியது.

    அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு, கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    சங்கத்தின் வட்டப் பொறுப்பாளர் கே.சி.ராமசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஜி.மணி, மாவட்ட அமைப்பாளர் வி.கோவிந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.தருமன், செயலாளர் இருதயராஜ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சேகர், சி.ஐ.டி.யூ.-வின் மாவட்டச் செயலாளர் பீட்டர், சிங்காரப்பேட்டை வட்டாரத் தலைவர் வி.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தகுதி விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மனைப்பட்டா இல்லாத விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை 200 நாள்களாகவும், கூலித் தொகையை ரூ.300-ஆக உயர்த்த வேண்டும்.

    விவசாயத் தொழிலாளர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை, உழவர் பாதுகாப்பு அட்டை, மருத்துவக் காப்பீடுத் திட்டம் ஆகிய பயன்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதிய நிர்வாகிகள் தேர்வு: சங்கத்தின் மாவட்டத் தலைவராக கே.சி.ராமசாமி, துணைத் தலைவராக கே.நாகராஜ், செயலாளராக வி.கோவிந்தசாமி, இணைச் செயலாளராக ஆர்.சக்தி, பொருளாளராக கே.எம்.எத்திராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai