சுடச்சுட

    

    ஒசூரில் தனியார் கல்லூரி, பள்ளிப் பேருந்துகளை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.

    ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆய்வில், 250-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரி, பள்ளிப் பேருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன.

    மாணவர்கள் செல்லும் பேருந்துகளில் பிரேக், முகப்பு விளக்குகள், பள்ளிப் பேருந்து என எழுதப்பட்டுள்ளதா, அவசர வழி உள்ளதா ஒட்டுநர் உரிமம், இன்சூரன்ஸ் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தனர். குறைபாடுகள் உள்ள பேருந்துகளை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அவற்றைச் சரி செய்யும்படி உத்தரவிட்டனர்.

    ஆய்வு ஒசூர் சார்-ஆட்சியர் பிரவீண் பி.நாயர் தலைமையில் நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடேசன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிவேல், மாவட்டக் கல்வி அலுவலர் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai