சுடச்சுட

  

  ஒசூர், தேன்கனிக்கோட்டைக்கு வந்த விவேகானந்தரின் 150-ஆவது பிறந்த நாள் விழா ரத யாத்திரைக்கு பொதுமக்கள், இந்து அமைப்பினர் அமோக வரவேற்பு அளித்தனர்.

  ஒசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி, பேரிகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி வரவேற்றனர்.

  ஒசூர் பெருமாள் மணிமேகலைப் பொறியியல் கல்லூரிக்குச் சென்ற இந்த யாத்திரையை கல்லூரி நிறுவனர் பெருமாள் வரவேற்றார். அவர் விவேகானந்தரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அங்கு நடைபெற்ற கூட்டத்தில் மதுரை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்த மஹராஜ், ஒசூர் வாத்சல்யம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் கெüதமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

  இளைஞர்களின் முன்னோடி, இந்தியாவை சர்வதேச அளவில் பெருமைப்படுத்தியவர், தேசபக்தி நிறைந்தவர் ஆகிய தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.

  நிகழ்ச்சியில், கல்லூரிச் செயலாளர் பி.குமார், முதல்வர் எஸ்.சித்ரா, இயக்குநர் என்.சுதாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai